ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட சில திரைப்படங்கள் உருவாகியிருந்தாலும், முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் இதுபோன்ற முயற்சிகளில் இதுவரை யாரும் ஈடுபடாத நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் முழு படமும் படமாக்கப்பட உள்ளது.
’105 மினிட்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட உள்ளது.
ராஜா துஷ்ஷா இயக்கத்தில் உருவாகும் தெலுங்கு திரைப்படமான இப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் தெலுங்குத் திரைப்படம் என்ற சாதனையை படக்க உள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானர் படமாக உருவாகும் இப்படம் குறித்து நடிகை ஹன்சிகா பேசுகையில், “தெலுங்கு திரையுலகில், முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை கொண்ட இப்படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரமாக நான் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி. இயக்குநர் ராஜா துஷ்ஷா என்னிடம் கதை கூறிய போது மிகவும் வித்தியாசமாக, ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. திரைக்கதை பரபர திரில் பயணமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்ததாக அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு சிறப்பு என்னவெனில் படத்தின் தலைப்பான ’105 மினிட்ஸ்’ தான். படத்தின் நீளம் 105 நிமிடங்கள் கொண்டது, படத்தின் உண்மையான நேரமும் படத்தின் கதை நேரமும் ஒன்றே.
ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இளம்பெண்ணை பற்றியது தான் கதை. இதை தவிர தற்போதைக்கு கதை குறித்த ரகசியங்களை கூற முடியாது. ஆனால் மேலும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது.” என்றார்.
பொம்மக் சிவா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 3 ஆம் தேதி தொடங்குகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...