ஒவியா, அஞ்சலி, விமல், சிவா ஆகியோரது நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கலகலப்பு 2’ என்ற தலைப்பில் சுந்தர்.சி இயக்க உள்ளார்.
இதில், சிவா - ஜெய் ஆகியோர் நடிக்க உள்ள நிலையில், ஓவியாவை இதில் நடிக்க வைக்க சுந்தர்.சி விரும்பியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ள ஓவியா நடித்தால் படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என்பதால், ஓவியாவை சுந்தர்.சி அனுக, ஆனால் ஓவியாவோ நடிக்க மறுத்துவிட்டாராம். அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதை கொடுக்க சுந்தர்.சி தயாராக இருந்த போதிலும், ஓவியா நோ சொல்லிவிட்டாராம்.
எதற்காக ஓவியா, கலகலப்பு 2-வில் நடிக்க மறுத்தார் என்பது குறித்து விசாரிக்கையில், சுந்தர்.சி அவரை கவர்ச்சியில் உறித்தெடுக்க நினைத்தாராம். ஏற்கனவே கலகலப்பு படத்தின் பாடல்களில் ஓவியாவை ரொம்ப கவர்ச்சியாக காட்டிய சுந்தர், இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று ஓவியாவிடம் சொன்னாராம்.
தற்போது பிக் பாஸ் மூலம், மக்களின் அன்பை பெற்றுள்ள ஓவியா, அவர்களிடம் உள்ள நன்மதிப்பை கெடுத்துக்கொள்ள விரும்பாததால் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதனால் தான் சுந்தர்.சி-க்கு நோ சொல்லிவிட்டாராம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...