விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. ‘விஜய் 65’ என்று அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்குகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஜார்ஜியா நாட்டில் இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்னை திரும்ப உள்ள படக்குழு சென்னையில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்புக்காக மிக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்று அமைக்கப்பட உள்ளதாம். இந்த செட்டில் தான் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்களாம்.
40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும் ஷாப்பிங் மால் படத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, ஷாப்பிங் மாலை மையப்படுத்தி தான் கதையை எழுதப்பட்டிருக்கிறதாம். எனவே, ரியல் ஷாப்பிங் மாலில் படப்பிடிப்பு நடத்தினால் நினைத்தது போல காட்சிகளை படமாக்குவதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் தான் ஷாப்பிங் மாலையே செட் போட முடிவு செய்திருக்கிறார்களாம்.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தாலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், படப்பிடிப்பில் மாற்றம் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...