முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இந்திய திரையுலகில் முத்திரை பதிக்கும் வகையில், முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராட்சச குரங்கை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.இராமசாமி தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கவுசிக்கரா, என்.இராமசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தின் கதை எழுத, கோகுல்ராஜ் பாஸ்கர் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அரவிந்த்சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் நூற்றுக்கும் அதிகமான கணிணி வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளை நடிக்க வைத்து பெரும் வெற்றிக்கண்டவர் மறைந்த இயக்குநர் இராம.நாராயணன், அவருடைய நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்திய திரையுலகில் முத்திரை பதிக்கும் வகையில், தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான ராட்சச குரங்குப் படமான ‘கபி’ படத்தின் தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...