முடிவடைந்தது ‘கும்பாரி’ படப்பிடிப்பு! - கொண்டாடிய படக்குழு
Tuesday April-27 2021

யோகி பாபு நடிப்பில் கடந்த மாதம் வெளியான் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தை இயக்கிய கெவின் இயக்கும் இரண்டாவது படம் ‘கும்பாரி’. ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் இப்ப்டத்தில் அபி சரவணன் நாயகனாக நடிக்க, மஹானா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

 

Kumbaari

 

படம் குறித்து இயக்குநர் கெவின் கூறுகையில், “இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் திடீரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

 

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக  நடத்தி முடித்துள்ளோம்.” என்றார்.

 

Kumbaari

 

பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயபிரகாஷ் மற்றும் ஜெய்தன் இசையமைக்கிறார்கள். ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.

Related News

7496

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery