தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரஷாந்த நடிப்பில் வெளியான ‘செம்பருத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ரோஜா, திருமணத்திற்குப் பிறகும் சில திரைப்படங்களில் நடித்து வந்தவர், தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார். இதனை தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், துவண்டு போகாமல் தொடர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர், தற்போது ராஜமுந்திரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பதோடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.
ரோஜா - ஆர்.கே.செல்வமணி தம்பதிக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள். இவர்களது சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ரோஜா சமீபத்தில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ரோஜாவை விட அவரது மகள் அழகாக இருப்பதாகவும், விரைவில் அவர் கதாநாயகியாக களம் இறங்குவார், என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...