Latest News :

தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்! - ஜாக்குவார் தங்கம் எச்சரிக்கை
Friday April-30 2021

ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரித்துள்ள படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’. பரணி ஜெயபால் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்ததோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி திக்‌ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயராகி வரும் நிலையில், ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பு வைக்க கூடாது, என்று தயாரிப்பாளர் கே.பிச்சாண்டிக்கு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் பிச்சாண்டி கில்டு அமைப்பில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த புகார் குறித்து இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜாக்குவார் தங்கம் கூறியதாவது:

 

தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி என்பவர் கில்டில் ' தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பை பதிவு செய்தார். நாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே தலைப்பை கில்டு (GUILD) சார்பாக பதிவு செய்தோம்.

 

தற்போது முழு திரைப்படத்தையும் முடுத்து விட்டதோடு 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பில், தயாரிப்பாளர் பிச்சாண்டி தணிக்கை சான்றிதழும் பெற்றுவிட்டார்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அதேபோல், தயாரிப்பாளர் வாகனத்தில் செல்லும் போதும் சிலர், அவரை தலைப்பை மாற்றும்படி மிரட்டியுள்ளனர். தயாரிப்பாளரின் நண்பர் சரவணனையும் இது தொடர்பாக மிரட்டியுள்ளனர்.

 

மத்திய அரசு அங்கீகரித்த தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்ல நீங்கள் யார்? அப்படியே அந்த தலைப்பில் எதாவது பிரச்சனை என்றால், அது குறித்து சங்கத்தில் புகார் அளிக்கலாம். அதை விட்டுவிட்டு தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் மிரட்டுவது சரியல்ல. இனியும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தால், காவல்துறையில் சங்கம் சார்பாக புகார் அளிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 

 

Tamil Rockers

 

மேலும், மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு துணையாக நிற்போம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இவ்வாறு கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

Related News

7504

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery