ரஜினியின் ‘தர்பார்’ படத்தை இயக்கி முடித்த கையோடு விஜயின் 65 வது படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தில் இருந்து விலகினார். முன்னணி இயக்குநர் ஒருவர், விஜய் படத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, விஜய்க்கு ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநருக்கு இத்தகைய நிலையா!, என்று ஆச்சரியப்படவும் வைத்தது.
விஜய் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியேறினாலும், அப்படத்திற்கு வேறு ஒரு இயக்குநரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ஆனால், அப்படத்தில் இருந்து வெளியேறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இதுவரை தனது அடுத்தப் படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், குரங்கு ஒன்றை ஹீரோவாக வைத்து அனிமேஷன் படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், அதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறாராம். அதே சமயம், தமிழ், தெலுங்கு, இந்தி என எதாவது ஒரு மொழி சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோ ஒருவரின் கால்ஷீட்டை பெற்று, அவருடன் இணைந்து பணிபுரிய இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, தனது அனிமேஷன் படம் குறித்த அறிவிப்பை அறிவிக்க இருக்கிறாராம்.
இதற்கு காரணம், அனிமேஷன் படம் இயக்குவதை அறிவித்தால், முருகதாஸிடம் சரக்கு தீர்ந்துவிட்டதாக நினைத்துவிடுவார்கள், என்பதால் முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும், இல்லை என்றால், அதற்கான அறிவிப்பையாவது முதலில் வெளியிட வேண்டும், அப்படி செய்தால் தான் இயக்குநராக கெத்து காட்ட முடியும், என்று முடிவு செய்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், முன்னணி நடிகர்கள் யாராவது தனக்கு கால்ஷீட் கொடுப்பார்களா? என்று காத்துக் கொண்டிருக்கிறாராம்.
’துப்பாக்கி’ படத்தில் விஜய் பேசிய “ஐம் வெயிட்டிங்” என்ற வார்த்தை பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது அந்த வசனத்தை எழுதிய அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸே, முன்னணி ஹீரோக்களுக்காக “ஐம் வெயிட்டிங்” என்று மனதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...