Latest News :

ஆங்கிலப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சாம்ஸ்!
Monday May-03 2021

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவான சாம்ஸ், சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் நிலையில், ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation Jujupi) என்ற படத்தின் மூலம் முதல் முறையாக கதையின் நாயகனாக களம் இறங்குகிறார்.

 

காமெடியை மையப்படுத்திய கதைகளின் மூலம் காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக களம் இறங்கிய நிலையில், சாம்ஸ் முற்றிலும் வித்தியாசமாக நாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே காமெடியை தவிர்த்துவிட்டு, சீரியஸான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

சாம்ஸின் தோற்றம், நடிப்பு என அவரை முழுவதுமாக மாற்றியமைத்து இப்படத்தில் இயக்குநர் அருண்காந்த் நடிக்க வைத்திருக்கிறார். படத்தில் அவருடைய கதாப்பாத்திரமும், நடிப்பும் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு இருப்பதோடு, சாம்ஸை இப்படியும் நடிக்க வைக்கலாமா, என்று திரையுலகினரை ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் இருக்குமாம்.

 

இப்படத்தில் சாம்ஸுக்கு மனைவியாக வினோதினி வைத்தியநாதன் நடித்திருக்கிறார். இவர்களுடன், படவா கோபி, ராகவ், ஜெகன், சந்தானபாரதி, வெங்கட் சுபா, வையாபுரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண்காந்த் கூறுகையில், ”சாம்ஸை முதல் முறையாக ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறேன். மிகப்பெரிய ஆபரேஷன் ஒன்றை சர்வசாதாரணமாக கையாளுவது தான் கதை. அதனால் தான் படத்திற்கு ‘ஆபரேஷன் ஜுஜுபி’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.

 

இது பேண்டஸி அரசியல் திரைப்படமாகும். ஒரு தனி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்காக ஒரு நாடு உருவாக வேண்டும், என்ற சாமாணிய மக்களின் கனவு தான் ’ஆபரேஷன் ஜுஜுபி’. மேஜிக்கலான மாஸ்டர் பிளான் ஒன்றை போடுகிறார்கள். அதன் மூலம் இந்தியாவை ஒரு மகிழ்ச்சி மிக்க நாடாக எப்படி மாற்றுகிறார்கள், என்பது தான் கதை. வித்தியாசமான திரைப்படமாக இருப்பதோடு, புதிய முயற்சியாகவும், சோதனை முயற்சியாகவும் இப்படம் இருக்கும்.

 

இப்படத்தை ஆரம்பிக்கும் போதே மே மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ், என்று அறிவித்தோம். அதேபோல், படத்தை முடித்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டோம். ஆனால், கொரோனா பரவலால் திரையரங்கங்கள் மூடப்பட்டதால், படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்று இரண்டு மாதங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் ‘ஆபரேஷன் ஜுஜுபி’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவோம். ஒருவேளை கொரோனா கட்டுப்பாடுகள் நீடித்தால், நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யும் பணியில் ஈடுபடுவோம். அப்படி ஒடிடியில் படத்தை ரிலீஸ் செய்தாலும், மீண்டும் திரையரங்கங்கள் திறக்கப்படும் போது திரையரங்குகளிலும் வெளியிடுவோம். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் என்ற பாராட்டை பெறும் படமாக ‘ஆபரேஷன் ஜுஜுபி’ இருக்கும்.” என்றார்.

 

Operation Jujupi

 

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் ஜுஜுபி’ படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தை வெகுவாக பாராட்டி யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

 

இப்படத்தை தயாரித்து இயக்கியிருப்பதோடு, இசை, ஆடை வடிவமைப்பு, ஒலியமைப்பு உள்ளிட்ட சுமார் 12 துறைகளில் அருண்காந்த் பணியாற்றியுள்ளார். வினோத் ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்ய, சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குநரான அருண்காந்த், ‘கோகோ மாக்கோ’, ’இந்த நிலை மாறும்’ ஆகிய படங்களை இயக்கி வெற்றிகரமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறார். தற்போது தனது மூன்றாவது திரைப்படமா ‘ஆபரேஷன் ஜுஜுபி’ படத்தை இயக்கியிருக்கும் அருண்காந்த், விரைவில் தனது நான்காவது படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க இருப்பதோடு, வருடத்திற்கு ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

Related News

7509

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

’பராசக்தி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday January-06 2026

டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery