தமிழ் சினிமாவின் முன்னணி வகையாக வலம் வந்த அஞ்சலி திடீரென்று, தமிழகத்தில் இருந்து மாயமாகி, ஆந்திராவில் தலைமறைவானார். அதற்கு, அவரது குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கலே காரணம்.
தனது சித்தி அஞ்சலி தேவி, தன்னை பணம் காய்க்கும் மரம் போன பார்ப்பதாகவும், எப்போது பணம்...பணம்...என்று தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டிய அஞ்சலி அவரது கட்டுப்பாட்டிருந்து விலகு, தெலுங்கு நடிகர் ஒருவரது கட்டுப்பாட்டுக்கு சென்றார். மேலும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்தும் வந்தவர், தற்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிகக் தொடங்கியுள்ள நிலையில், அவரது சித்து அஞ்சலிக்கு மீண்டும் சிக்கல் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சலியின் சித்து பாரதி தேவியின் மகள் ஆராத்யா, தமிழ் மற்றும் தெலுக்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவர் தனது அக்கா அஞ்சலி என்று டிவிட்டரில் பதிவிட, அஞ்சலியின் தங்கை சினிமாவில் எண்ட்ரியாகிறார் என்று செய்திகள் வெளியான. ஆனால், அஞ்சலியோ தனக்கு தங்கச்சி யாரும் கிடையாது. ஒரே ஒரு அக்கா மட்டும் தான் அவர் திருமணமாகி குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறார், என்று கூறினார்.
இந்த நிலையில், தான் அஞ்சலியை பார்த்து தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன். அவர் எப்படி உழைப்பால் முன்னணி நடிகை ஆனாரோ அதுபோல நானும் முன்னணி நடிகை ஆவேன், என்று கூறியுள்ள ஆராத்யா, அஞ்சலி என்னை தங்கை இல்லை என்று மறுத்தாலும், கடவுளுக்கு தெரியும் அவர் எனது அக்கா தான், என்று கூறியியுள்ளார்.
தனது மகளின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு செய்வது போல அஞ்சலியில் மறுப்பு இருப்பதால், அஞ்சலியிடம் அவரது சித்தி பாரதி தேவி பிரச்சினை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜெயுடன் காதல் முறிவில் சோகத்தில் இருக்கும் அஞ்சலிக்கு தற்போது தனது சித்தி மூலம் ஏற்பட்டிருக்கும் சிக்கல் பெரிய தலைவலியாக அமைந்திருக்கிறதாம்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...