விதார்த், பாரதிராஜா நடிப்பில் புதுமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வெளியான குரங்கு பொம்மை மிக்கப்பெரிய வெற்றி பெற்றதோடு, விமர்சனம் ரீதியாகவும் பல பாராட்டுக்களை பெற்றது.
இந்த படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதன் தெலுங்கு உரிமத்தை எஸ் போக்கேஸ் (S Focuss) நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து கூறிய எஸ் போக்கஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.சரவணன், “திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.” என்றார்.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...