கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், அத்தியாவாசிய தேவைகளுக்காக சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திரையரங்கங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், திரைப்பட மற்றும் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைபட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சங்கத்தின் பொருளாளர் பாலேஷ்வர், துணைச் செயலாளர் டிவி ஷங்கர், ஈ.ராம்தாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
ஆலோசனை கூட்டத்தில், திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து அரசு கூறும் நெறிமுறைகளை பின்பற்றி நடப்போம், என்று உறுதியளித்த திரைத்துறையினர், படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டர்.
திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சுவாமிநாதன், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும், என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பங்கேற்றது. மேலும் இவர்களுடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சேவியர் மரியா பெல்லும் உடனிருந்தார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...