Latest News :

பூர்ணா வில்லியாக கலக்கிய ‘பவர் ப்ளே’ தமிழில் ரிலீஸ்
Thursday May-13 2021

சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பூர்ணா தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், அவர் வில்லியாக நடித்த தெலுங்கு படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

‘பவர் ப்ளே’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம், பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

 

நாயகன் ஒருநாள் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்கிறான், வெளிவந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அவனிடம் வந்தவை போலியான ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இதன் பின்னே ஏதோ சதி இருப்பதாக உணர்கிறான். இதற்குக் காரணமாக யாரோ அதிகாரம் படைத்தவர்கள் தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். 

 

ஏடிஎம் மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகப் பல ஏஜென்சிகள் உள்ளன. அவர்கள் செய்த சதியால் தான் இவ்வாறு போலி ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டது என்று தெரிகிறது. அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போராடுகிறான் என்பது தான் 'பவர் ப்ளே'. மீள்வதற்கான அவனது போராட்டங்களைப் பரபரப்பான காட்சிகளோடு படமாக்கியிருக்கிறார்கள். 

 

இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி வெற்றி கண்டவர். வனமாலி கிரியேஷன்ஸ் பி.லிட் சார்பில் மகேந்தர், தேவேஷ் தயாரித்துள்ளனர்.

 

இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பரிச்சயமான பூர்ணா முக்கியமான வில்லி பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். பூர்ணாவுக்கு நடிப்பில் இன்னொரு முகத்தைக் காட்டும் வாய்ப்பு. கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர். மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ், அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

 

படத்திற்கு ஒளிப்பதிவு ஆண்ட்ரூ, இசை சுரேஷ் பொப்பிலி,எடிட்டிங் பிரவின் புடி, சண்டை இயக்கம் ரியல் சதீஷ் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளனர். 

 

'பவர் ப்ளே' இந்த தலைப்பு ஏன் என்றால் எவ்வளவு பவர் வாய்ந்த அதிகாரம் மிக்கவர்கள் தங்கள் பவரை வைத்து எப்படியான செயல்களையெல்லாம் செய்கின்றனர் என்பதைக் காட்டுவதால் தான் இந்த தலைப்பு என்கின்றனர் படக்குழுவினர்.

 

ஏற்கனவே தெலுங்கு மற்றும் இந்தியில் ஒடிடி தளத்தில் வெளியான இப்படம் தற்போது தமிழில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Related News

7523

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery