கொரோனாவால் திரைப்படத்துறை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கும் நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு (பெப்ஸி) திரை பிரபலங்கள் பலர் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அதே சமயம், பெப்ஸி அமைப்பில் அங்கம் வகித்தாக நடிகர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அந்த நிவாரண உதவி கிடைக்கவில்லை.
இதையடுத்து, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி செய்ய வேண்டும், என்று திரையுலகினரிடம் நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், தனது சொந்த செலவு மூலம் நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வரும் பூச்சி எஸ்.முருகன், இன்று 300-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை நடிகை கோவை சரளா மற்றும் நடிகர் தாடி பாலாஜி முன்னிலையில் வழங்கினார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...