Latest News :

நயந்தாராவின் ‘அறம்’ படத்திற்கு யு சான்றிதழ்!
Wednesday September-27 2017

நயந்தாரா கலெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ படம் முடிவடைந்து பல நாட்கள் ஆனாலும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதற்கிடையே, இப்படத்திற்உ தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

 

கோபி நைனார் இயக்கியுள்ள இப்படத்தை கொட்டப்படி ஜெ.ராஜேஷ் என்பவர் தயாரித்திருந்தாலும், நயந்தாரா தான் இப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர்.

 

சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படத்தின் கதையையும், நயந்தாராவின் நடிப்பையும் வெகுவாக பாராட்டியதோடு, படத்தில் துணிவாகவும் திறம்படவும்  அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு 'அறம்' பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

753

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
Thursday April-02 2026

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...

Recent Gallery