சுதந்திர போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 95. அவருடைய இறப்புக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், துளசி அய்யா வாண்டையார் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”ஐயா, துளசி அய்யா வாண்டையாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
சுதந்திர போராட்டத்திற்காக போராடியவர், டெல்டா மாவட்ட மக்களின் கல்விக்காகவும் தொடருந்து உழைத்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், எம்.பி-யாகவும் சிறப்பாக செயலாற்றியவர், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளராக இருந்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கினார்.
பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகியவராக இருந்தாலும், தனது எளிமையான வாழ்க்கை முறை மூலமாகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். ஐயா நம்மை விட்டு பிரிந்தாலும், அவருடைய சாதனைகள் மூலம் என்றுமே நம் மனதில் நிலைத்திருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...