கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர்கள் பலர் உயிரிழந்து வரும் நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் மனைவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவமும், அந்த தற்கொலை அந்த நடிகர் தான் காரணம், என்று அவருடைய மனைவியின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்திருப்பதும், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் உன்னி தேவ். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மனைவியை உன்னி தேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் உன்னி தேவ் மீது போலீசில் புகார் அளித்த பிரியங்கா, கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக, புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26.
பிரியங்கா உடலை பார்த்து கதறி அழுத அவரது பெற்றோர்கள், பிரியங்கா உடலில் காயம் உள்ளது. உன்னி தேவ் அடித்து துன்புறுத்தியதால் தான் இறந்துள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், பிரியங்காவின் நகைகளை உன்னி தேவ் விற்று செலவு செய்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...