சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளியன்று ஒடிடி-யில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம், ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்ற நிலையில், பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐ.எம்.டி.பி-யின் டாப் ரேட்டிங் திரைப்படங்களின் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலில், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 9.1 புள்ளிகள் பெற்று, 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
‘ஷஷாங் ரிடம்ப்ஷன்’ திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ‘காட்பாதார்’ திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...