விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாரதி கண்ணம்மா’ போன்ற சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
தற்போது திரையரங்கங்கள் மூடப்பட்டதாலும், மக்கள் வீடுகளில் அடைபட்டு இருப்பதாலும், அவர்களுக்கான ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி தான். அதிலும் பெண்கள் சீரியல்களிலேயே முழுகிப்போய் இருக்கிறார்கள். இதனால், பல தொலைக்காட்சிகள் புது புது சீரியல்கள் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்ததோடு, ஏற்கனவே மக்களிடம் வரவேற்பு பெற்ற சீரியல்களில் சில புதிய கிளைக்கதைகளை உருவாக்கி படமாக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருப்பதோடு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக சீரியல் படப்பிடிப்புகளில் பங்கேற்ற பெரும்பாலனவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரியல் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தொலைக்காட்சி நிறுவனங்கள் சீரியல்களை படமாக்க முடியதாபடி பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்களை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓளிபரப்பாகி வந்த ‘அன்புடன் குஷி’ என்ற சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது. சீரியலை தொடர்ந்து ஒளிபரப்ப தேவையான காட்சிகள் கையில் இல்லாததாலும், தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாததாலும், சீரியலை நிறுத்திவிட்டார்களாம்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...