கதாநாயகியை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘மஹா’. இதில் ஹன்சிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, சிலம்பரசன் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
யு.ஆர்.ஜமீல் இயக்கியிருக்கும் இப்படத்தை எட்செட்டெரா எண்டர்டெயின்மெண்ட் (ETCETERA Entertainment) நிறுவனம் சார்பில் வி.மதிழயகன் தயாரித்திருக்கிறார்.
இதற்கிடையே, இப்படம் விரைவில் வெளியாக இருந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, படத்தை வெளியிட தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடையவில்லை என்றும், தான் இல்லாமல் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தயாரிப்பு தரப்பு, ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டதாகவும், படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதால், வெளியீட்டு தேதியை முடிவு செய்ய சிறிது காலம் தேவைப்படும், என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இயக்குநர் தயாரிப்பு தரப்பு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்கொண்டு வருவதோடு, நீதிமன்றத்தின் உறுதியான முடிவுக்காக காத்திருக்கிறோம். ஆனால், இதுவரை ‘மஹா’படத்திற்கு எந்த ஒரு தடையையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஆனால், சிலர் ‘மஹா’ படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள், என்றும் தெரிவித்துள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...