வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க சிம்பு தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த ‘ஈஸ்வரன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை முன்னணி தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் வாங்கியுள்ளது.
ஆனால், படத்தின் தயாரிப்பு தரப்பு நிர்ணயித்த விலையை விட, மிக குறைந்த விலையை தொலைக்காட்சி தரப்பு நிர்ணயம் செய்ததாம். இதனால், தயாரிப்பு தரப்பு அதிர்ச்சியடைந்தாலும், தற்போதைய சூழலுக்கு இதுவே பெரிய விஷயம் என்பதால், தொலைக்காட்சி கொடுத்த தொகையை பெற்றுக் கொண்டு படத்தை கொடுத்து விட்டதாம்.
அந்த தொலைக்காட்சி விஜய் டிவி. ‘ஈஸ்வரன்’ படக்குழு நிர்ணயம் செய்த தொகை ரூ.10 கோடியாம். ஆனால், விஜய் தொலைக்காட்சி ரூ.3 கோடி தான் கொடுத்ததாம். ஆனால், ஆரம்பத்தில் ரூ.1 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறிய தொலைக்காட்சி மேலாளர், தற்போது ரூ.3 கோடிக்கு படத்தை வாங்கியிருப்பது, பெரிய விஷயம் தான், என்று கூறுகிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...