தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன், கதாநாயகன் அவதாரம் எடுத்து சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததால் தொடர்ந்து நடிகராக வெற்றிபெற போராடி வந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.
பிக் பாஸில் கிடைத்த ரசிகர் வட்டத்தின் மூலம் எப்படியாவது நடிகராக வெற்றி பெற்றுவிடுவார், என்று பார்த்தால், அதற்குள் நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ம.நீ.ம சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட சினேகன், தோல்வியை தழுவினார்.
இருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகாமல் அக்கட்சியில் தொடர்ந்து பயணிக்கும் முடிவில் இருக்கும் சினேகன், அதேபோல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய திருமண தகவல் தற்போது கோலிவுட்டில் தீயாக பரவி வந்தாலும், அவர் திருமணம் செய்ய இருக்கும் பெண் யார்? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
எனவே, சினேகனின் திருமணம் பற்றி பேசுபவர்கள், பெண் யார் தெரியுமா? என்று கேட்கவும் செய்கிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...