பிக் பாஸ் 5 வது சீசனின் தொகுப்பாளர் இவர் தான்! - அட்வான்ஸும் வாங்கிட்டாராம்
Sunday May-23 2021

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக உள்ள பிக் பாஸ் தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், ஐந்தாவது சீசனுகான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், கொரொனா பரவலின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நான்காவது சீனைப் போல் ஐந்தாவது சீசனும் இந்த ஆண்டின் இறுதியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம்.

 

இதற்கிடையே, தமிழ் பிக் பாஸின் நான்கு சீசன்களிலும் தொகுப்பாளராக வந்த நடிகர் கமல்ஹாசன், தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளதாலும், அவருடைய கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதாலும், அவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக பங்கேற்க மட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகர் சிம்புவை தொகுப்பாளராக்கும் முயற்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு குழு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில பிரபலங்களின் பெயர்களும் இது தொடர்பாக அடிபட்டது.

 

இதனால், பிக் பாஸின் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கும் நடிகர் யார்? என்ற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மனதில் எழுந்ததோடு, அது பற்றி அறிய ஆவலாகவும் இருந்தார்கள்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் தொகுப்பாலர் யார்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஐந்தாவது சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப்போகிறாராம். அதுமட்டும் அல்ல, விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டமோல் நிறுவனத்துடன் 10 வருடங்கலுக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், ஆக இன்னும் ஒளிபரப்பாக இருக்கும் 6 சீசன்களுக்கும் கமல்ஹாசன் தான் தொகுப்பாளராக வருவார் என்றும் கூறப்படுகிறது.

 

Big Boss

 

மேலும், பிக் பாஸ் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அட்வான்ஸ் தொகை பெற்று விட்டதோடு, அந்த பணத்தை வைத்து தான் தனது கட்சியின் தேர்தல் செலவுகளை அவர் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Related News

7538

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery