பாலிவுட் சினிமாவில் 80 மற்றும் 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரேகா, மறைந்த தமிழ் நடிகர் கெமினி கணேசனின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அவர் குறித்து தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
சவாலான மற்றும் சர்ச்சையான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ரேகா, முன்னணி நடிகையாக இருந்த போது, அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானை திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், குறிப்பாக பாலிவுட் நடிகைகள் பலருடன் அவர் நெருங்கி பழகி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலிவுட் நடிகை ரேகாவும், அவரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் மும்பை கடற்கரைகளில் ஒன்றாக சுற்றி திரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், டேட்டிங் நடிகைகள் பற்றி இம்ரான் கானின் கருத்தும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகைகளுடனான உறவு என்பது ஒரு குறுகிய காலத்திற்கு நல்லது. அவர்களை நான் ரசிக்கிறேன், பிறகு அவர்களுடன் பழகுகிறேன். ஒரு திரைப்பட நடிகையை திருமணம் செய்வது பற்றி என்னால் யோசிக்க கூட முடியாது, என்று அவர் ஒரு முறை கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...