ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் இன்று (செப்டம்பர் 27) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் “மேயாத மான்” திரைப்படம் வடச்சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாகும். இத்திரைப்படத்தில் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க ரத்ன குமார் இயக்கியுள்ளார். முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரபல திரைப்பாடகர் பிரதீப் குமார் இணைந்து இசையமைகின்றனர். இருவரும் இணைந்து இப்படத்திற்கு 7 இனிமையான பாடல்கள் இசையமைத்துள்ளனர். இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ஒவ்வொன்றும் பல லட்சம் பேரால் கேட்கப்பட்டு வருகின்றன.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து விவேக் வேல்முருகன் வரிகளில் அந்தோணி தாசன் பாடிய “தங்கச்சி பாடல்" முதலில் வெளியிடப்பட்டது. இரண்டாவதாக பிரதீப் குமார் எழுதி பாடி இசையமைத்த “என்ன நான் செய்வேன்" பாடல் வெளியிடப்பட்டது. மூன்றாவதாக விவேக் வேல்முருகன் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய “அடியே எஸ்.மது" பாடல் வெளியிடப்பட்டது. இம்மூன்று பாடல்களும் மக்கள் மத்தியிலும் இணையதளங்களிலும் பெரும் வரவேற்ப்பை தொடர்ந்து பெற்று வருகின்றன.
இதனை அடுத்து இப்படத்தின் முழு பாடல் ஆல்பத்தை மாணவர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளனர். லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களின் “Ovations” நிகழ்ச்சியில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின்றன.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...