மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தர், தமிழ் சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடிக்க தொடங்கியவர், ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித் மகளாக நடித்து பிரபலமானார்.
மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, அவ்வபோது தனது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்ததாலும் கூடுதல் பிரபலமடைந்தார். சோசியல் மீடியாவில் அவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வரும் அனிகா, கடந்த வரும் தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில், சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய அனிகாவிடம், ரசிகர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தினார். மேலும், அந்த நபர், “என் காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துக் கொள்வேன்” என்று மிரட்டல் விடுத்தார்.
இதற்கு பதில அளித்த அனிகா, இதுபோல் எனக்கு பல முறை நடந்திருக்கிறது, அதை மீண்டும் நினிவு படுத்த வேண்டாம், என்று கூலாக கூறினார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...