அல்லு சிரிஷின் ABCD திரைப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவருடைய புதிய படத்தின் ப்ரீ லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அல்லு சிரிஷுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.
இப்போஸ்டரை கொண்டாடி வரும் அல்லு சிரிஷ் ரசிகர்கள் #Sirish6 என்ற ஹேஸ்டேக் மூலம் ட்விட்டரில் டிரெண்டிங் செய்தும் வருகிறார்கள்.
ஜி.ஏ2 பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அல்லு அரவிந்த் வழங்க, விஜேதா பட புகழ் ராகேஷ் சசி இயக்குகிறார்.
இந்த ப்ரீ லுக் வெளியீட்டோடு படத்தின் பர்ஸ்ட் லுக்கின் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அல்லு சிரிஷின் பிறந்தநாளான மே 30 ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.

ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் வகையில், ஃப்ர்ஸ்ட் லுக்குக்கு முன்னதாக இன்னொரு ப்ரீ லுக் போஸ்டரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது டோலிவுட்டில் புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது.
தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் அல்லு சிரிஷின் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடைசியாக அவர் தோன்றிய இந்தி டான்ஸ் ஆல்பம் வீடியோ ரிலீஸான சில நாட்களிலேயே யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...