Latest News :

ஸ்ரீ ரெட்டியுடன் தொடர்பு! - காயத்ரி ரகுராமின் அந்தரங்க ரகசியங்கள்
Friday June-04 2021

நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்ததை விட, அதிகமான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். பா.ஜ.க கட்சி பிரமுகரான அவர், அவ்வபோது சமூகப்பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்க, அவரது பேச்சு நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்ப்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், இதுவரை அவரைப்பற்றி வெளிவராத தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது, பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், அப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி புகார் தெரிவிக்க, இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசா ராஜகோபாலனை கைது செய்து நடத்திய விசாரணையில், பத்ம சேஷாத்ரி பள்ளியில் உள்ள மேலும் சில ஆசிரியர்களும் மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் சில பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 100 மாணவிகள் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த பிரச்சனையை மதம் தொடர்பான பிரச்சனையாக மடை மாற்றம் செய்யும் விதமாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட, அவரது பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்க, சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

 

அவர்களில் ஒருவராக காயத்ரி ரகுராமும், மதுவந்தி பேச்சுக்கும், பத்ம சேஷாத்ரி பள்ளிக்கும் ஆதரவாக பேசியிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் பற்றியோ, குற்றம் செய்த ஆசிரியர் பற்றியோ அவர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது, சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

மேலும், பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என்று கருத்து தெரிவித்த நடிகர் விஷால் மீது பாலியல் குற்றம் சாட்டிய நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் விஷாலால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்திருக்கிறது, என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் பிஸ்மியின் சமீபத்திய வலைதள பேட்டி ஒன்றில், காயத்ரி ரகுராம் விஷால் மீது சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு பதில் அளித்த பத்திரிகையாளர் பிஸ்மி, காயத்ரி ரகுராம், ஒய்.ஜி.மகேந்திரனின் உறவுக்காரர்களில் ஒருவராக இருப்பார். உற்று நோக்கினால் அவர்களுடைய உறவு முறை தெரியும். அதனால் தான் அவர், பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார், என்று பதில் அளித்துள்ளார்.

 

மேலும், தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் புகார் சுமத்திய போது, அவர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், காயத்ரி ரகுராம் மட்டும் அப்போது எதுவும் பேசவில்லையே ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிஸ்மி, ஸ்ரீ ரெட்டி பற்றி காயத்ரி ரகுராம் பேசியிருந்தால், அவரைப்பற்றிய பல அந்தரங்க ரகசியங்கள் வெளியாகியிருக்கும். அதனால் தான் அப்போது காயத்ரி ரகுராம் அமைதியாக இருந்து விட்டார். ஸ்ரீ ரெட்டிக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த பலருடைய அந்தரங்க ரகசியங்கள் தெரியும். அந்த வகையில் காயத்ரி ரகுராம் பற்றிய அந்தரங்க ரகசியங்கள் அவருக்கு தெரியும் என்பதால் அவர் அப்போது எதுவும் பேசவில்லை. இப்பவும் நான் ஒரு சவாலாகவே சொல்கிறேன், காயத்ரி ரகுராமுக்கு தைரியம் இருந்தால் ஸ்ரீ ரெட்டி பற்றி பேச சொல்லுங்கள். நிச்சயம் அவர் பேச மாட்டார். அப்படி அவர் பேசினால் அவரைப் பற்றிய பல அந்தரங்க ரகசியங்கள் வெளி வரும், என்று தெரிவித்துள்ளார்.

Related News

7551

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery