Latest News :

இசையமைப்பாளர் ஜிப்ரானின் புது முயற்சி! - வெற்றி பெறுமா?
Friday June-04 2021

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான், இதுவரை எந்த இசையமைப்பாளரும் செய்யாத ஒன்றை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

‘சாஹோ’ என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி  இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT Non Fungible Token எனும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத்தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த  வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அமைப்பிற்கும்,  இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத்துறை சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது. 

 

இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது, படத்தில் இடம்பெறாத ‘சாஹோ’ பட  ஹீரோ தீம் இசையை, NFT ( Non-Fungible Token ) முறையில் வெளியிடுவதில்  மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழ்நாடு முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த  50% கொரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையில் செய்யப்பட்ட NFT ( Non-Fungible Token ) முயற்சி ஆகும். இந்த இசை தொகுப்பினை, பட இயக்குநரை  தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை. இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போது காட்சியின் தன்மை கருதி, வேறு வகையிலான இசைத்துணுக்கை செய்தோம். அதனால் இந்த இசையினை எங்குமே வெளியிடவில்லை.

 

இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பினை உயரிய விலை ஒன்றை அளித்து வாங்கலாம். இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும், எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10  ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.” என்றார்.

Related News

7552

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery