Latest News :

கும்பகோணம் குணாவாக கிஷோர் நடிக்கும் ‘கதிர்’
Wednesday September-27 2017

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ‘கதிர்’. தோழர் அரங்கன் இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

 

கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர், அனைவரும் தெரிந்தவராக இருந்த ஒருவர். நிஜத்தில் வாழ்ந்த கும்பகோணம் குணாவாக, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 8 முறை குங்ஃபு-வில் பிளாக் பெல்ட் வாங்கிய 

மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார். கிஷோர் -  மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்க்கு நிகராக எடுக்கப்பட்டு 

வருகிறது.

 

புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம், கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், 

’பசங்க’ சிவகுமார், செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

சேரண் பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த செளந்தர்யன் இசையமைக்கும் 50 வது படமாக உருவாகும் 

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பும் வகையில், அண்ணாமலை, கபிலன், கிருதயா ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும், இப்படத்தின் ஒரு பாடலுக்கு முன்னணி ஹீரோயின் ஒருவர் நடனம் ஆட இருக்கிறார்.

 

சமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் கடந்து போனால், என்ன நடக்கும் என்பதை எதார்த்தத்தோடும், தமிழ் கலாச்சார 

பண்பாட்டோடும், பெண்கள் குடும்பத்தோடு பார்க்கக கூடிய அளவுக்கு காமெடியோடு ஜனரஞ்சகமான படமாக, தோழர் அரங்கன் இப்படத்தை உருவாக்கி வருகிறார். 

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் தோழர் அரங்கன், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஆர்.எம்.நந்தகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

 

வி.ஆர்.கம்பைன் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம், மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதோடு, கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய பகுதிகளிலும் ‘கதிர்’ வளர்ந்து வருகிறான்.

Related News

756

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...

Recent Gallery