இசை பிரியர்களை ஈர்க்கும் இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மாவின் புதிய இசை ஆல்பம்!
Tuesday June-08 2021

கொரோனா ஊரடங்கினால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் மக்களின் மனங்களில் புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான புதிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. “காதலை காதலிப்போம்...” என்று தொடங்கும் இந்த பாடலை ‘ஓட்டம்’ படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளருமான எஸ்.பிரதீப் வர்மாவும், இயக்குநர் எம்.முருகனும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.

 

தனி இசை ஆல்பங்களின் வருகை தமிழ் இசைத்துறையில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இயக்குநர் எம்.முருகனின் காதல் கவிதைக்கு, ஈர்ப்பான மெட்டமைத்த எஸ்.பிரதீப் வர்மா, தனது குரல் மூலம் இசை பிரியர்கள் ரசிக்கும் இனிமையான பாடலாகவும் கொடுத்திருக்கிறார்.

 

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மா கூறுகையில், “நான் நிறைய கன்னடப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். தமிழிலும் ஏற்கெனவே இசை ஆல்பம் வெளியிட்டுருக்கிறேன். காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நல்ல தமிழ் கவிதையை பயன்படுத்தி இசை ஆல்பம் வெளியிட வேண்டும் என வெகு நாளாக விருப்பம் இருந்தது. அது இந்த இசை ஆல்பத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இயக்குநர் எம்.முருகன் எழுதிய காதல் கவிதை அதற்கு துணையாக இருந்தது. விரைவில் வெளிவர இருக்கும் ’ஓட்டம்’ திரைப்படத்தின் மூலம் எனது தமிழ் திரைப்படப் பாடல்களும் ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தாக அமையும் என நம்புகிறேன். தமிழ் சினிமா என்னும் மகா சமுத்திரத்தில், நானும் ஒரு துளியாக இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.” என்றார்.

 

இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மாவின் யூடியூப் தளத்தில் வெளியாகியிருக்கும் இப்பாடல், சாவன், விங், கானா உள்ளிட்ட பல இசைத்தளங்களிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

Related News

7560

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery