பிக் பாஸ் முதலாவது சீசன் மூலம் பிரபலமான ரைசா வில்சன், திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அவர் நடித்த முதல் திரைப்படமான ‘பியார் பிரேமா காதல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.
இதையடுத்து கோலிவுட்டின் பிஸியான நாயகிகளில் ஒருவரான ரைசா வில்சன், சமீபத்தில் தனது முகத்தை அழகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அலோங்கோலமாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அழகு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது ரைசா வழக்கு தொடர, பதிலுக்கு ரைசா மீது மருத்துவர் வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் ரைசா பெயர் ஹாட் டாப்பிக்காக சில வாரங்கள் இருந்தது.
பிறகு கொரோனா பிரச்சனையால் மக்கள் ரைசாவை மறக்க, கிடைத்த கேப்பில், மற்றொரு சிகிச்சையை மேற்கொண்டு தனது முகத்தை சரி செய்துக் கொண்ட ரைசா, தனது சரியாகி விட்டது, என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த, தனது சோசியல் மீடியா பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், ரசிகர்களிடம் நேரடியாக உரையாட முடிவு செய்த ரைசா, தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் காதல் குறித்து கேட்ட போது, தான் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட அந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த ரைசா, தற்போது நல்ல இதயம் கொண்ட புதிய காதலருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...