கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
அதன்படி நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...