ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில், கமல்ஹாசன் நடத்தும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11 வது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான்கான், 11 வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சல்மான்கான், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் சில நாட்கள் தங்கவும் போகிறாராம்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...