கொரோனா 2வது அலை மூலம் தமிழகத்தில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், திரையுலகினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதற்கிடையே, சினிமா படப்பிடிப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், சீரியல் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதன் மூலம் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழத் திரைப்படங்களிலும், பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் கவிதாவின் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
’ஆட்டுக்கார அலமேலு’, ‘நாடோடித் தென்றல்’, ‘அமராவதி’ போன்ற படங்கள் மூலம் பிரபலமான கவிதா, தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடிப்பதோடு, ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது 'நந்தினி’, ’என்றென்றும் புன்னகை’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இவரது மகனின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த கொரோனா காலத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் வீட்டில் இருந்த கவிதா, தற்போதைய இரண்டாவது அலையின் போது, சீரியல் படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டதால் தான், கொரோனா தொற்றுக்கு அவரது குடும்பம் ஆளானதாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...