இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ நேற்று ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே மிகப்பெரிய பொருட்ச் செலவில் உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியாகவில்லை, என்று தனுஷும் அவருடைய ரசிகர்களும் கவலை அடைந்த நிலையில், படத்தின் ரிசல்ட் அதைவிட பெரிய கவலையை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருப்பது ஒரு பக்கம் இருக்க, முழு படத்தையும் பார்க்கும் போது, மூன்று நாட்களை கடந்த ஒரு உணர்வு ஏற்படுவதாகவும் சிலர் விமர்சித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி, அதை தனுஷ் ரசிகர்கள் பார்த்திருந்தால், அவர்களுக்கு நிச்சயம் பைத்தியமே பிடித்திருக்கும் என்பதால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை காப்பாற்றிய தயாரிப்பாளர் சசிகாந்துக்கு, பலர் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
தனுஷை தமிழகத்தில் பெரிய ரவுடியாக காட்டுவதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சித்தரித்த பயங்கரமான ஒரு காட்சி, வடிவேலுவின் காமெடியை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. அந்த காட்சியை தொடர்ந்து லண்டனில் நடக்கும் படம் முழுவதும் ஒரே காமெடி கலாட்டாவாகத்தான் இருக்கிறது. அதிலும், ஜோஜு ஜார்ஜ் போன்ற நல்ல நடிகர்களை அழைத்து வந்து அசிங்கப்படுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், முழு படத்தையே தாங்கி பிடிக்கும் நாயகன் தனுஷை வச்சு செஞ்சிருக்காரு.
மொத்தத்தில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்திரத்தில் சிக்கிய தனுஷை போல், அவருடைய ரசிகர்கள் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்றால், இந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...