தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் லைகா புரொடக்ஷன்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருவதோடு, அறிமுக இயக்குநர்கள் மற்றும் வளர்ந்து வரும் நாயகர்களை வைத்தும் திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், இயக்குநர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள். உடன் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...