அறிமுக இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கத்தில், அபி சரவணன் நாயகனாக நடிக்கும் படம் ‘சாயம்’. இதில் கதாநாயகியாக ஷைனி நடிக்கிறார். இவர் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இவர்களுடன் போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒயிட் லேம்ப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.பி.ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஒளிப்பதிவு செய்ய, முத்து முனியசாமி படத்தொகுப்பு செய்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் அமீர், சுசீந்திரன், சமுத்திரக்கனி, ராஜேஷ், சுப்ரமணிய சிவா மற்றும் எஸ் ஆர் பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.
மேலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை இன்று சாயம் படக்குழுவினர் சந்தித்தனர். அவர் இப்படம் பெரும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்போது போஸ்ட புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...