திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய லைகா!
Monday June-21 2021

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில், அதன் நிறுவனர் சுபாஸ்கரன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய நிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

 

கொரோனா பரவல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

 

இதற்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India) தலைவர் .ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் .ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வழங்கினார். 

 

லைகா நிறுவனத்தின் இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் சுப்பு நாராயன், பெப்சி நிர்வாகிகள் சுவாமிநாதன், தினா, ஜெ.ஸ்ரீதர், அசோக் மேத்தா, எஸ்.செந்தில்குமார், புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related News

7578

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery