கொரோனா தொற்றால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல நடிகரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனும் பிரபல நடிகருமான ஹம்சவர்தனின் மனைவி சாந்திக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை காரணமாக அவர் குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாந்தி ஹம்சவர்தனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட, அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் இன்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 42.

ஹம்சவர்தன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு நாளை மதியம் 2:30 மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...