’குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இராஜாமோகன், மூன்றாவதாக இயக்கும் படம் ‘அட்ரஸ்’.
1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது அட்ரஸை தொலைத்த ஒரு கிராமத்திற்கு மீண்டும் அட்ரஸ் கிடைத்ததா இல்லையா, என்பதே இப்படத்தின் கதை.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான இளைஞராக காளி என்ற வேடத்தில் அதர்வா முரளி நடித்திருக்கிறார். படத்தின் முக்கியமான கதாப்பாத்திரமான இதில், நட்புக்காக கேட்டவுடன் அதர்வா நடித்து கொடுத்தாராம்.
ஒரு காதல் பாடல் மற்றும் இரண்டு சண்டைக்காட்சிகளும், புரட்சிகரமான பல காட்சிகளையும் கொண்ட அதர்வாவின் கதாப்பாத்திரம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும், வகையில் வந்திருக்கிறதாம்.
அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார். இவர்களுடன் இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இராஜாமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ‘மெரீனா’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினேகன், மோகன் ராஜா, கானா ஹரி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். தியாகு படத்தொகுப்பு செய்ய, சில்வ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலைகளிலும், மலை சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...