Latest News :

வெற்றிக்காக இளம் நடிகரின் பழைய முயற்சி! - வேலைக்கு ஆகுமா?
Wednesday June-23 2021

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வெற்றி பெறுவதற்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட மிக முக்கியமானது அதிஷ்ட்டம். அந்த அதிஷ்ட்டம் இருந்தால் விஜய் சேதுபதி போன்ற சாதாரண மனிதர்கள் கூட மாமனிதனாக முடியும், அதே அதிஷ்ட்டம் இல்லை என்றால், அரவிந்த்சாமி போன்ற அழகான ஹீரோக்கள் வில்லனாவதும் உண்டு.

 

இப்படிப்பட்ட அந்த அதிஷ்ட்டம் சிலருக்கு இயற்கையிலேயே இருக்க, பலரோ அதை தேடி செல்வதும் உண்டு. அப்படி தேடி செல்பவர்கள் செல்லும் முதல் வேலை, தங்களது பெயரை மாற்றிக்கொள்வது. அதிலும், ’வி’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம், என்ற நம்பிக்கை சினிமாவில் ரொம்பவே அதிகம்.

 

அப்படிப்பட்ட நம்பிக்கையோடு தான் தமிழ் சினிமாவில் பல வி நடிகர்கள் அறிமுகமாகி அதில் பலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதே நம்பிக்கையில், இளம் நடிகர் ஒருவர் வெற்றிக்காக இந்த பழைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

 

’கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ’பட்டதாரி’, ’மாயநதி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, அதிதி மேனன் என்ற நடிகை விவாகரத்தில் தான் அதிகம் அறியப்பட்டார். தற்போது ஒரு நடிகராக தமிழக மக்கள் தன்னை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அபி சரவணன் கடுமையாக போராடி வருகிறார்.

 

அதன்படி, ‘சாயம்’, ’கும்பாரி’ உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் அபி சரவணன், உழைப்பு மட்டும் போதது, அதிஷ்ட்டமும் வேண்டும் என்பதால், தற்போது தனது பெயரை ‘விஜய் விஷ்வா’ (Vijay Vishwa) என்று மாற்றிக் கொண்டுள்ளார். 

 

தனது பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள அபி சரவணன், இனி தன்னை விஜய் விஷ்வா என்று அழைக்கும்படியும், தன்னைப் பற்றிய செய்திகள் உள்ளிட்ட அனைத்திலும் தனது பெயரையே பயன்படுத்துமாறும் அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Related News

7585

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery