தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்த திருமணத்திற்கு சில முக்கியமானவர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளார்களாம்.
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவர் பெயர் ரோகித். இவர் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகனான ரோகித், தமிழ்நாடு அணிக்கு விளையாட இடம் கிடைக்காததால் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விளையாடினாராம். அதன் பிறகு அவரது தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணீ தொடக்கப்பட்டவுடன், அந்த அணிக்கு ரோகித் கேப்டன் ஆனாராம்.

தற்போது புதுச்சேரி அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோகித்துக்கு 29 வவயதாகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் இருக்கிறாராம்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...