தமிழகத்தில் கொரோனா பரவல் படிபடியாக குறைந்து வரும் நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு துறைகள் மீண்டும் மெல்ல மெல்ல செயல்பட தொடங்கியிருக்கும் நிலையில், திரைப்பட படப்பிடிப்புகளும் தொடங்கியுள்ளது. அதே சமயம், திரையரங்கங்கள் திறப்புக்காக பல திரைப்படங்கள் காத்திருக்கின்றன.
ஒடிடி தளங்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் விருப்பம் காட்டினாலும், ஒடிடி தளங்களில் திரைப்படங்களை பார்க்க மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. அதேபோல், முன்னணி நடிகர்களும் ஒடிடி-யில் தங்களது படங்கள் வெளியாவதை விரும்புவதில்லை. காரணம், சுமாரான படங்களை கூட திரையரங்கிற்குள் வரும் ரசிகர்கள் கூட்டம் சூப்பர் படமாக மாற்றுவதுண்டு. ஆனால், ஒடிடி-யை பொருத்தவரை நல்ல திரைப்படங்கள் கூட சீரியல் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது.
பொருளாதார ரீதியாக ஏற்படும் இழப்புகளை சமாளிப்பதற்காக சிலர் நேரடியாக ஒடிடி தளங்களில் திரைப்படங்களை வெளியிட்டாலும், பலரது விருப்பம் என்னவோ திரையரங்கமாக தான் இருக்கிறது.
இந்த நிலையில், வித்தியாசமான பேய் படமாக உருவாகியிருக்கும் ‘மாயத்திரை’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் வி.சாய், திரையரங்க திறப்புகாக காத்துக்கொண்டிருக்கிறார்.
அசோக்குமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், ‘டூலெட்’, ‘மண்டேலா’ ஆகிய படங்கள் மூலம் பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார். தி.சம்பத் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசையமைத்திருக்கிறார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்கங்கள் மீண்டும் திறந்த சில வாரங்களில் இப்படம் வெளியாக உள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...