தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோன பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதே சமயம், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருபவர், கொரோனா 3ம் அலையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளையும் முடக்கிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக திரையுலகை சேர்ந்த பலர் நேரில் சந்தித்து வருகிறார்கள். சிலர் முதல்வர் நிவாரண நிதிக்காக நன்கொடைகளும் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அர்ஜூன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு, என்று அர்ஜூன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அர்ஜூன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததோடு, அவரை கோவில் கும்பாபிஷேக நிகழ்வுக்காக அழைக்கவும் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜூன் ஏற்கனவே ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். மேலும், புதிய கோவில் ஒன்றை கட்டியிருப்பதாகவும், அந்த கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற இருக்கிறதாம். அந்த நிகழ்வில் முதலவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும், என்று விரும்பியவர், அதற்காக அவரை நேரில் சந்தித்து அழைத்ததாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...