தமிழக பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற தொழிலதிபருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி கொடுப்பதாக கூறி, அதற்கு கட்டணமாக அவரிடம் இருந்து ரூ.1 கோடியை ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரூ.1 கோடியை பெற்றுக்கொண்ட ஆர்.கே.சுரேஷ், சொன்னது போல் கடன் வாங்கி கொடுக்கவில்லையாம். மேலும், ராமமூர்த்தி இறந்து விட்டாராம். இதையடுத்து ராமமூர்த்தியின் மனைவி வீனா, ஆர்.கே.சுரேஷ் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் தனது கணவர் ராமமூர்த்தியை ஆர்.கே.சுரேஷுக்கு அறிமுகம் செய்து வைத்த கமலகண்ணன், தங்களை போல் பலரை மோசடி செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக வீனா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பல முறை காவல்துறையில் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறும் வீனா, காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...