ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முதன்மை நடிகர்களாக விளங்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோரது படங்கள் எப்படி இருந்தாலும் போட்ட முதலீட்டை காட்டிலும் கூடுதலாக வசூல் செய்துவிடுவதால், போஜை போட்டவுடனே இவர்களது படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் வரிசையில் நிற்பார்கள்.
இனி, விஜய் மற்றும் அஜித் படத்திற்கு மட்டும் அப்படி நடக்கப் போவதில்லை, விஜய் சேதுபதி படத்திற்கும் அப்படித்தான் நடக்கப் போகிறது. நடக்க போகிறது என்ன, நடந்துவிட்டது.
‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் ஜி.எஸ்.டி-என்ற அசூரனையே விழுங்கிய விஜய் சேதுபதி, அப்படம் செய்த வசூலால் தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த வியாபாரத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிட்ட விஜய் சேதுபதி, கோகுல் இயக்கத்தில் நடிக்கும் ‘ஜுங்கா’ படத்தை சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தும் வருகிறார்.
விஜய் சேதுபதியை இதுவரை பார்க்காத ஒரு வேடத்தில், மிகப்பெரிய மாஸ் எண்டர்டெயினர் படமாக உருவாகும் இப்படம் இன்னும் படப்பிடிப்புக்கே போகாத நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, இன்னும் படப்பிடிப்பே தொடங்காத இப்படத்தினை ஏ & பி குரூப்ஸ் என்ற திரைப்பட வெளியீட்டு நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை வாங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு படம் வியாபாரம் ஆவது விஜய், அஜித் ஆகியோருக்கு பிறகு விஜய் சேதுபதியி படம் தான், என்பதால் தற்போது அவரும் தமிழ் சினிமாவின் முதன்மை ஹீரோக்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதையை வைத்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கும் இப்படத்தின் பல முக்கிய காட்சிகள் பிரான்ஸ் நாட்டில் படமாக்கப்பட உள்ளது.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...