Latest News :

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிதா! - பின்னணியில் ரம்யா கிருஷ்ணனா?
Saturday July-03 2021

வனிதா என்றாலே வம்பு, என்ற ரீதியில் சென்ற இடமெல்லாம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மக்களிடம் பிரபலமாகி அதை வைத்து தற்போது பணம் சம்பாதிக்கவும் தொடங்கியுள்ளார். திரைப்பட வாய்ப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி வாய்ப்புகள் என்று பிஸியாக இருப்பவர், அப்படியே நேர்காணல், சமூக வலைதளம் உள்ளிட்ட பல வகையில் கல்லாக்கட்ட தொடங்கியிருக்கிறார்.

 

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற நடன நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கியது. இதில், சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடி சேர்ந்து பங்கேற்ற வனிதா, தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதோடு, தனது வளர்ச்சியை பார்த்து பலர் பொறாமைப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது குறித்து வனிதா அளித்திருக்கும் விளக்கத்தில், ஒருவர் கேலி செய்யப்படுவதையும் துன்புறுத்தப் படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அது என் குடும்பத்தினரும் இருந்தாலும் சரி என்பதை இந்த உலகுக்கே தெரியும் விஜய் என்பதை தான் எனக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது இருவரும் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதும் நீடிக்கும்.ஆனால், வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார்.

 

கடுமையாக உழைத்து முன்னேறிய ஒரு மூத்தவர் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை தரம் தாழ்த்தி பார்ப்பது அவர்களை அவமானப் படுத்துவதை வேதனையாக உள்ளது குடும்பம் கணவர் பெற்றோர்கள் வேதனையாக இல்லாமல் ஒரு தனி பெண்ணாக மூன்று குழந்தைகளுக்கு தாயாக சாதித்துவரும் ஒரு பெண்ணை இப்படி நடத்துகிறார். ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

 

பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற பிக்பாஸ் எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

வனிதா குற்றம் சாட்டும் அந்த சீனியர் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் என்று கூறுகிறார்கள். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், வனிதாவை திட்டமிட்டே மற்றவர்கள் முன்பு அவமானப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

 

ஆனால், இது குறித்து ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. அதையும் மீறி இது தொடர்பாக என்னுடைய கருத்தை கேட்டால், “நோ கமெண்ட்ஸ்” என்று தான் சொல்வேன், என்று அசால்டாக கூறுகிறாராம்.

Related News

7604

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery