கொரோனா பாதிப்பினால் தமிழ் சினிமா மட்டும் இன்றி பிற மொழி திரையுலகிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பச்சை என்கிற காத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சரண்யா சசி, மலையாளத்தில் ‘சோட்டா மும்பை’, ‘தலப்பாவு’, ‘மரியா காலிப்பினலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடங்களிலும் நடித்து வந்தார்.

சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசி, கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவருடைய தோழியும், மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...