திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வரும் நடிகை ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இணைய தொடர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இணைய தொடருக்கு ‘இரை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த இணைய தொடரை ‘தூங்காவனம்’ மற்றும் ‘கடாரம் கொண்டான்’ படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.
பரபரப்பான க்ரைம் திரில்லர் ஜானர் இணைய தொடராக உருவாகும் ‘இரை’-யின் படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

இந்த இணைய தொடர் குறித்து தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் கூறுகையில், “எங்கள் ராடான் மீடியா ஒர்க்ஸ் குடும்ப ரசிகர்களின் ரசனையை முதன்மையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். கடந்த பல வருடங்களாக பொழுதுபோக்கு உலகின், பல்வேறு துறைகளில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும், பல கதைகளை வழங்கி பல அற்புதமான வெற்றிகளை பெற்றுள்ளது இந்நிறுவனம். பல வித்தியாசமான படைப்புகளை இந்த தலைமுறையிலும் வழங்க, இந்த வெற்றிகள் பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது. ஒடிடி தளத்தில் எங்களது அறிமுக தயாரிப்பான ’இரை’ இணைய தொடர், எப்போதும் போல் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் பொருந்திய அற்புதமான கதையாகும். இந்த இணைய தொடர் க்ரைம் திரில்லர் வகையில் உருவானாலும், உறவுகள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும்.” என்றார்.
ஜிப்ரான் இசையமைக்கும் இத்தொடருக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, சசி கலையை நிர்மாணிக்கிறார். சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...